சென்னை: மாமன் படம் வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களை பகிரங்கமாக சாடிய தம்பி சூரியை பலே பாண்டியா என்று பாராட்டுகிறேன் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சுட்டியுள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாஸ்சிகா, பால சரவணன் உள்ளிட்ட பல நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. படம் ஃபேமிலி சப்ஜெக்ட்டில் எமோஷன் கலந்த சென்டிமென்ட் காட்சிகள் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது. மேலும் சூரியின் எதார்த்தமான நடிப்பு பாராட்டு பெற்று வருகிறது.

இதற்கிடையே நேற்று வெளியான மாமன் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டத்தை சுட்டிக்காட்டி, இவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கு வெட்கமாக உள்ளது. இது போன்ற செயலை செய்பவர்கள் ரசிகர்களாக இருக்க கூட தகுதியற்றவர்கள் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சூரியின் இந்த நடவடிக்கைக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரைப்பட வெற்றிக்காக மண் சோறு தின்ற ரசிகர்களை பகிரங்கமாக சாடிய தம்பி சூரியை பாராட்டுகிறேன். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும், கலாச்சாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும் பகுத்தறிவு காத்திருக்கும் நடிகர் சூரியை பலே பாண்டியா என்று பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}