சென்னை: கொரியன் சீரியல் பார்த்தவர்கள் அதன் பிறகு அதை விடவே மனசு வராது. அந்த அளவுக்கு அதற்கு அடிக்ட் ஆகி விடுவார்கள். காரணம், அந்த சீரியல்களில் காணப்படும் எதார்த்தம், வாழ்வியலை அழகாக படம் பிடித்துக் காட்டுவது.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படித்தான் கொரிய உணவுகளும் போலும். அந்த சுவைக்கு அடிமையானவர்களில் நம்ம கவிஞர் வைரமுத்துவும் ஒருவர். அந்த அனுபவ உணர்வை தனது தமிழ்ச் சுவையுடன் கலந்து தனது எக்ஸ் பக்கத்தில் கொடுத்துள்ளார் வைரமுத்து. அதை நீங்களும் படியுங்கள்:
சென்னையில்
உலக உணவுக் கடைகள்
பெருகிவிட்டன
மாதம் ஒருநாள் என்னைக்
கொரியன் உணவகம்
கூட்டிச் செல்வார்கள்
மதன் கார்க்கியும் கபிலனும்

கூழாங்கல் அளவில்
இனிப்பில் ஊறிய
உருளைக்கிழங்குகள்,
தித்திக்கும் காரத்தில்
முட்டைக்கோஸ்
மற்றும் கொரியன் கீரைகள்
பசியூட்டிகளாய்ப் பரிமாறப்படும்.
பிறகு சூப்
கடல் பாசியில் அவித்த
கோழி இறைச்சியின் சாறுவரும்.
அது
நவம்பர் மாதத்தில்
போர்த்துப் படுக்கும்
போர்வைச் சூட்டின்
பதத்தில் இருக்கும்
பருகி முடிக்கையில்
வெள்ளை தேவதையாய்
ஒரு கொரியப் பெண் வருவாள்;
மேஜையில் அடுப்பு மூட்டுவாள்;
தீ வளர்த்து
வெண்பன்றியின் விலாக்கறி அறுப்பாள்
அடங்கி எரியும் தீக்கொழுந்தில்
கறியின் வெண்ணிறம்
பொன்னிறம் ஆகும்வரை வாட்டுவாள்;
பின்னர் அதைச்
சிறு துண்டுகள் செய்வாள்
இனி உண்ணத் தொடங்குவது
நம் வேலை
லெட்யூஸ் இலைகளுக்குள்
பன்றிக் கறியைச் சுருட்டவேண்டும்.
அதில் வெங்காயத் தழைகள்;
இங்கிலிஷ் இலைகள்;
பூண்டுத் துண்டுகள்;
மற்றும் நாவுக்கேற்ற பச்சைமிளகாய்
அனைத்தையும் திணித்து
பீடாபோல் உருட்ட வேண்டும்
வாயின் ஓர் ஓரம் செருகிக்
கடைவாய்ப் பற்களால்
கடித்துண்ண வேண்டும்
கொரியன் உணவு முறையுள்
இதுவும் ஒன்று
இங்கே தானிய உணவு
தள்ளி வைக்கப்பட்டிருப்பதால்
எவ்வளவு உண்டாலும்
இரைப்பை நிறைவதில்லை
அதனால்தான்
கொரியன்களுக்குப்
பெரும்பாலும் தொப்பையில்லை
புரிகிறதா தோழர்களே!
வயிற்றை அடைக்காமல்
சாப்பிடுகிறவன் பாக்கியவான்
வயிற்றில் இருக்கும்
மிச்சத்தில்தான்
சேமிக்கப்படுகிறது
அவரவர் ஆயுள்
என்னங்க.. நீங்களும் கிளம்பிட்டீங்களா.. உங்களது தொப்பையைக் குறைக்க!
வானம் அருளும் மழைத்துளியே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 19, 2025... இன்று கார்த்திகை மாத அமாவாசை
வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}