புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் சீற்றம் கொண்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கவதற்கு முன்னரே இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை ஒரு பாடு படுத்தி விட்டது. எங்கு பார்த்தாலும் சூரிய பகவானின் தாக்கம் தான். வீட்டிற்கு உள்ளேயும் இருக்க முடியவில்லை, வீட்டை விட்டு வெளியிலயும் போக முடியவில்லை. கரண்ட் வேற அடிக்கடி கட் ஆகி பொதுமக்களை கடுப்பாக்கிவிட்டது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி வேறு அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது.
பொதுவாக அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கும் என்று கூறுவர். அந்த நாட்களில் தான் வெயிலின் கொடுமையும் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் அதிகமாக வெளுத்து வாங்கியது. இந்த கத்திரி வெயில் வேறு வரும் 29ம் தேதி வரை தமிழகத்தை வாட்டி வதைக்கும் என்று வேறு வானிலை மையம் தெரிவித்திருந்து. இதை எல்லாம் பார்த்து மிகவும் பயந்து போய் இருந்தனர் பொதுமக்கள்.
அத்துடன், தற்போது அடிக்கும் வெயில் தாக்கத்தை விட இன்னும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக அடிக்கும் என்றும் சொல்லப்பட்டது. அக்னி நட்சத்திர நாட்களில் காலை 7 மணி முதல் அக்னி பகவான் தனது உக்கிரத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டார். இனி வரும் அக்கினி நட்சத்திர நாட்களை எண்ணி பொதுமக்கள் புலம்பி வந்தனர். வெயில் அதிகம் இருப்பதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பின்னர் தான் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கியது. முதலில் ஒரு சில இடங்களில் பெய்த மழை அடுத்து அனைத்து இடங்களிலும் பெய்து மக்களை மகிழ்வித்தது. கடந்த 3 மற்றும் 4 நாட்களாக தொடர்ந்து அநோக இடங்களில் கனமழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்தது.நேற்று நள்ளிரவில் இருந்து பெய்து வந்த மழையால் காரைக்காலில் 6 செ.மீ மழை பதிவானது. இந்த நிலையில், புதுச்சேரியில் பெய்த மழைக்காரணமாக கடலில் சீற்றம் காணப்பட்டது.
அதுவும் புதுச்சேரியில் இன்று இரவு 11.30 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடப்பட்டள்ளது.கடலுக்கு செல்லும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க மீன்வளத்துறை அறிவுறுத்தியது. வட தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இன்றிரவு வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் கரை ஓரமாக உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}