- மஞ்சுளா தேவி
சென்னை: காவல்துறை பணியினை சிறப்பாகும் வகையில் என்னவெல்லாம் செயல்படுத்தலாம் என பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான சேவை காவல்துறை பணிதான். ஊரெல்லாம் நிம்மதியாக இருக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுவோர்தான் காவல்துறையினர். அப்படிப்பட்ட காவல் பணியை அறப்பணி என்று சொல்வார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்கள் பாதுகாப்பாகவும் ,மன நிம்மதியுடனும், வாழ்வதற்கு காவல்துறை பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் காவல்துறையின் பணிகளை எப்படியெல்லாம் சிறப்பாக செயல்படுத்தலாம் என பொதுமக்களிடம் தங்களின் கருத்துக்களை தபால் மூலம் எழுதி அனுப்பலாம் என காவல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு ஐந்தாவது காவல் ஆணையம் (police commission) அமைத்துள்ளது. இந்க ஆணையமானது, சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.
காவல் பணியினை செம்மைப்படுத்த பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர், 5வது காவல் ஆணையம் , அசோக் நகர், சென்னை -83.
மின்னஞ்சல் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் :
fifthpolicecommission@gmail.com
நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புபவர்கள் 05 .12. 2023 அன்று காலையில் 10:30 மணி அளவில் பிற்பகல் 01:30 மணி வரை மேற்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
மேல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கைபேசி எண்: 9791987112
காவல் கண்காணிப்பாளர்,
5வது காவல் ஆணையம்,
அசோக் நகர் ,
சென்னை -83 - என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை குறித்து உங்களிடம் ஏதாவது யோசனை இருக்கா.. ஆக்கப்பூர்வமான யோசனைகள் இருந்தால் அனுப்பி வையுங்க.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}