சென்னை : தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு குறித்து திரும்பிய பக்கமெல்லாம் வேதனை வெளிப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், தலைவர்களும் எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
டிடிவி தினகரன் - திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும்.
இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் குவும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுகதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக சி.விஜயபாஸ்கர் - தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று, எப்படியும் உடல் நலம் தேறி மீண்டு வருவார் என்ற நம்பிக்கையும் இன்று சேர்ந்தே மறைந்து விட்டது. ஆற்றொண்ணா துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாநிதி மாறன் - தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுள்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தெலங்கானா துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர்கள் பலரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}