சென்னை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, இந்த முறையும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவில் கேரளா மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ராகுல் காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக டில்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை தமிழகம் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டுள்ளனர். கேரளாவிற்கு பிரச்சாரத்திற்கு வருபவர் எதற்காக தமிழகம் வர வேண்டும். நேரடியாக கேரளாவிற்கே சென்றிருக்கலாமே என அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக என பாரபட்சம் இன்றி பல விஐபி.,க்கள் செல்லும் வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.4650 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று ராகுல் மற்றும் பிரதமர் மோடி இருவருமே கேரளாவின் பல பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் கேரளாவிற்கு வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}