சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை எதிரொலியாக, கடந்த மூன்று நாட்களில் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நாளை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள காளைகளும் காளையர்களும் தயாராகி வருகின்றனர். மறுபக்கம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக மக்கள் வீடுகளை தூய்மை செய்வது, வண்ணம் பூசுவது, வீட்டை அலங்கரிப்பது,பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது என மக்கள் பிசியாக பரபரப்பாக இயங்கிக் கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக மக்கள் கடந்த சனிக்கிழமை முதலே பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களையும் முற்றுகையிட துவங்கிவிட்டனர். அதே சமயம் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்க சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர்.
சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம்,ஆகிய பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருப்பினும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதோடு, பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.மக்கள் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.
பொங்கல் விடுமுறை நாளை தான் துவங்க உள்ளது. இருந்தாலும்கூட முன்கூட்டியே மக்கள் அரசு பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எவ்வளவு பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்ற தகவலை தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு கடந்த மூன்று நாட்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 11,463 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் பயணம் செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். காலையிலிருந்தே பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}