பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. பொங்கலுக்கு ஊருக்குப் போகணுமா.. செப். 12 முதல் முன்பதிவு தொடக்கம்!

Sep 10, 2024,06:11 PM IST

சென்னை:   பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நாட்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் கொண்டாடும் முக்கிய  பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை. அதிலும் விவசாயிகள் தங்கள் உழவுத் தொழிலுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஜாதி மதம் பேதம் இன்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்த நேரத்தில் பயணிப்பதற்கு வசதியாகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் முன்கூட்டியே டிக்கெட் போட்டு விடுவது வழக்கமாகி விட்டது.




அதிலும் பொங்கல் தீபாவளி பண்டிகை வருவதற்கு 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுகிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகை ஜனவரி 13-ஆம் தேதியும், பொங்கல் பண்டிகை 14-ம் தேதியும், மாட்டுப் பொங்கல் 15-ம் தேதியும், காணும் பொங்கல் 16-ம்தேதியும்  கொண்டாடப்பட உள்ளது.


இதற்காக சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ஆம் தேதி வரை  முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


செப்டம்பர் 12ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்யலாம். செப்டம்பர் 13ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11-ல் பயணம் செய்யலாம். செப்டம்பர் 14ஆம் தேதி முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12-ல் பயணம் செய்யலாம். அதேபோல் செப்டம்பர் 15ஆம் தேதி முன் பதிவு செய்பவர்கள் போகி பண்டிகை அன்று ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழக்கமாகவே முன்பதிவுகள் தொடங்கிய சில விநாடிகளிலேயே முடிந்து விடுவது வழக்கம். எனவே மக்களே கரெக்டாக டைமுக்குப் பண்ணிடுங்க. டிக்கெட் கிடைக்காதவர்கள் கவலைப்படாதீங்க.. இருக்கவே இருக்கு அரசுப் பேருந்துகளும், ஸ்பெஷல் ரயில்களும். நம்பிக்கையோடு இருப்போம்.. நல்லபடியா பண்டிகையை கொண்டாடுவோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்