சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்கும் பொருட்டு, நாளை ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழர் திருநாளாம் தைப்பாங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று (ஜனவரி-9) சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வரகின்றன. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை(ஜனவரி 10) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}