பொங்கல் பண்டிகை.. கோவை, பெங்களூரு, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Jan 11, 2024,05:41 PM IST
சென்னை: பொங்கல் கூட்ட நெரிசலையடுத்து தாம்பரத்திலிருந்து கோவைக்கும், பெங்களூரிலிருந்து திருச்சிக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. பலரும் தாங்கள் வசித்தும் வரும் ஊர்களிலிருந்து சொந்த ஊர்களுக்குக் கிளம்ப ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே வழக்கமான ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதையடுத்து தற்போது சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு கிட்டத்தட்ட19,000 சிறப்புப் பேருந்துகளை பொங்கலுக்காக இயக்கவுள்ளது. இதில் 10,000 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படவுள்ளன. நேற்று தாம்பரத்திலிருந்து நெல்லைக்கும், தூத்துக்குடிக்கும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்தது. தற்போது கோவைக்கும், பெங்களூரு, திருச்சிக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



கோயம்புத்தூர் டூ தாம்பரம்

தாம்பரத்திலிருந்து கோவைக்கு ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், கோவையிலிருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்திலிருந்து இரவு 8.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் வழியாக காலை 5.20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். 

தாம்பரம் டூ கோயம்புத்தூர்

ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

காலை 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவையை  மாலை 4.30 மணிக்கு சென்றடையும்.

பெங்களூரு டூ திருச்சி




இதேபோல பெங்களூரு, திருச்சி இடையேயும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.  பெங்களூரிலிருந்து நாளை இயக்கப்படும் சிறப்பு ரயில் பகல் 2.30 மணிக்கு கிளம்பி முற்பகல் 11.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ஜனவரி 13ம் தேதி திருச்சியிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.  அன்று அதிகாலை 4.45  புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்