பொங்கல் பண்டிகைக்கான.. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது..?

Sep 12, 2023,05:09 PM IST
சென்னை: 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு நாளை (செப்டம்பர் 13) முதல் தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள், ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம். ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர் அரசு விடுமுறைகள் வர உள்ளது.

ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ,பயணிகள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் எடுக்கவும் காத்திருக்கிறார்கள். இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.



ஜனவரி 11ஆம் தேதிக்கான பயண முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதிக்கான ரயில்களுக்கு செப்டம்பர் 15ம் தேதியும் முன்பதிவு தொடங்கும். அதேபோல ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ம் தேதியும், ஜனவரி 15ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதியும் தொடங்கும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி  இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர் மூலமாக முன்பதிவு  செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்