டெல்லி: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவியும் எம்எல்ஏ பதவியும் தானாகவே பறிபோயின. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி அப்பீல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைத்தது. அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க முடிவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு கூறி ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை பரிசீலித்த ஆளுநர் ஆர்.என். ரவி, தீர்ப்பு தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர பொன்முடி நிரபராதி என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று கூறி பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்து விட்டார்.
இதை எதிர்த்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஆளுநர் செயல்பாடுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு புறம்பானது. அரசியல் சாசனத்தை மீறும் செயல். அமைச்சர்கள் சிலரின் இலாகா மாற்றத்துக்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல் உள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் பதவி வகிக்க பொன்முடி தகுதியானவராக மாறுகிறார்.
அப்படி இருக்கும்போது முதல்வர் முதல்வரின் பரிந்துரை ஏற்க மறுத்து ஆளுநர் செயல்படுவது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு போட்டியாக அரசு நடத்த ஆளுநர் முயல்கிறார். எனவே அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு தமிழ்நாடு அரசின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் ஏற்றுக்கொண்டு நாளையே விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}