மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

Oct 06, 2026,10:09 AM IST

- பூரணவள்ளி சேகர்


கடையில் உள்ள புது வரவான புடவைகளை  விளம்பரப்படுத்த யூடியூபில் வீடியோ போட்டாயிற்று. பாலாஜி இன்று வாடிக்கையாளர் பலர் வந்தும் ஒரு புடவை கூட அவரது கணக்கில் விற்கவில்லையே என்று சஞ்சலத்துடன் இருந்தார்.


பிற்பகல் நேரத்தில் மாலாவும் ராதாவும் வந்து புடவைகளை பார்த்தனர். பாலாஜி புடவைகளை விரித்துக் காட்டினார். பச்சை நிறமும் பிங்க் நிறமும் வேண்டாம் ஏற்கெனவே நிறைய புடவைகள் அந்த நிறத்தில் உள்ளதெனக் கூறினார்கள்.


பாலாஜி எடுத்த பச்சை மற்றும் பிங்க் நிறப் புடவைகளைத் தள்ளி வைத்து விட்டு வேறு புடவைகளைக் காட்டினார்.

இந்த டிசைனில் வேறு நிறத்தில் இருந்தால் காட்டுங்கள் என்றனர். இந்தப் புடவையில் பார்டர் சிறியதாக உள்ளதே என்றனர். இந்தப் புடவையில் தலைப்பு பளிச்சென்று இல்லையே என்றனர்.


சிரித்துக் கொண்டே புடவைகளைக் காட்டிய பாலாஜி கடைசியாக  பச்சை நிறப் புடவையையும் பிங்க் நிறப் புடவையையும் மேலாக எடுத்து வைத்தார். அதைப் பார்த்த இருவரும் உடனே அவற்றைப் பாய்ந்து எடுத்தனர்.




அதனைத் தூரமாக நின்று கவனித்த கணேஷ் இந்தப் புடவைகளை வேறொருவர் தேர்வு செய்து வைத்ததாகக் கூறினார். மாலாவும் ராதாவும் இந்தப் புடவைகள் தான் வேண்டும் என்று விவாதம் செய்தனர்.


சிறிது நேரம் யோசிப்பது போல பாவனை செய்த பாலாஜி சரி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பணம் செலுத்தும்படி கூறினார். பாலாஜியும் கணேஷும்  யாரும் எடுத்து வைக்காத புடவைகள் பாலாஜியின் கணக்கில் விற்கப்பட்டதை நினைத்து நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.


அடுத்தவர்கள் தேர்வு செய்த புடவைகளே மாலா மற்றும் ராதாவின் மனதைக் கொத்தின.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்