சென்னை: கோரதாண்டவம் ஆடி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது புயல். தற்பொழுது சென்னையை கடந்த நிலையில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக புயல் வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையே கடல் போல் கட்சியளித்தது. மின்சாரம் தடை, சாலைகளில் வெள்ளம், வீடுகளில் வெள்ள நீர் தேக்கம், ரோடுகளில் திடீர் பள்ளம், சாலை போக்குவரத்து பாதிப்பு, விமான போக்குவரத்து பாதிப்பு, ரயில் போக்குவரத்து பாதிப்பு, அவசர தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர் .இந்நிலையில் சென்னையை கதறவிட்ட புயல் சென்னையை விட்டு ஆந்திராவிற்கு சென்றதால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று மழை நின்றுள்ளது. மழை நின்றாலும் புயல் விட்டுச் சென்ற பாதிப்பு மட்டும் அதிகமாக உள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. முழுவீச்சில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் குறிபிட்ட இடங்களில் மழைநீர் வடியாமல் இருப்பதினால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் ஈடுபட்டு வரும் பகுதிகளிலில் மீட்பு குழுவினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
சாலை போக்குவரத்து குறிப்பிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. புறநகர்களில் சரிவர மின்சாரம் வரவில்லை. சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவில் தான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறாக சென்னை இயல்பு நிலயை நோக்கி திரும்பி வருகிறது.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}