டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஹென்ஷு பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பான், தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இது பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் தைவானில் ஒரு சில பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் மக்கள் பீதியில் உறைந்த நிலையில், அடுத்து கடல் அலைகள் மூன்று அடி தூரம் வரை எழுந்து சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் ஜப்பான், தைவானில் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜப்பானில் இரண்டாவது நாளாக இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொன்ஷு கிழக்குக் கடற்கரை அருகே உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நில அதிர்வின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. தற்போது மீண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}