டோக்கியோ: ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் 7.1 ரிக்டர் அளவில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

பலத்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் காயமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரு நிலநடுக்கங்களும் ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷீ பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 2021ம் ஆண்டு கிழக்கு கடலோரப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்ற போதிலும் அது சக்தி வாய்ந்ததாக அமைந்திருந்தது. அது மட்டும் இன்றி கடந்த 2011ம் ஆண்டு இதே பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததது.
இந்நிலையில் தற்போது மீண்டும் 7.1 ரிக்கடர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
{{comments.comment}}