சென்னை: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுத்தபோது தவறி விழுந்து பரிதாபமாக கர்ப்பிணி கஸ்தூரி உயிழந்தார். இதில் அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதை தற்போது தெற்கு ரயில்வே மறுத்துள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயதான கஸ்தூரி. சென்னையில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. கஸ்தூரி 7 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தனர். கஸ்தூரிக்கு வளைகாப்பு நடக்க இருந்ததால், அனைவரும் சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக ரயிலில் பயணித்தனர்.
ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. அப்போது, காற்றோட்டமாக இருப்பதற்காக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்ட போது நிலைதடுமாறி தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். உறவினர்கள் அபாய சங்கிலியை இழுக்க முயன்ற போது அந்த சங்கிலி வேலை செய்யவில்லை. அந்த சங்கிலி வேலை செய்திருந்தால் அப்பெண்ணை காப்பாற்றி இருக்க முியும் என்று குற்றம் சாட்டப்பட்டது.
கஸ்தூரி மரணத்தைத் தொடர்ந்து ரயில்களில் அபாயச் சங்கிலி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை; ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு; அபாய சங்கிலி சரிவர இயங்கியது; கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் உள்ள 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியது என்று தெற்கு ரயில்வே துறை விளக்கம் கொடுத்துள்ளது.
அப்படியானால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தும் ரயில் நிற்காமல் போனது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}