விருத்தாசலம்: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுத்த கர்ப்பிணி நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையம் பதற வைத்துள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடப்பதால் ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில் உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் இருந்த 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு வாந்தி வந்துள்ளது. அப்பெண் காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்ட போது நிலைதடுமாறி தவறி விழுந்து விட்டார். இதைப் பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கத்திக் கூச்சல் போட்டனர். அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தபோது அது வேலை செய்யவில்லை.

அந்தப் பெட்டி முழுவதும் அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பக்கத்துப் பெட்டிக்கு ஓடிப் போய் அங்கு அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளனர். இதற்குள் ரயில் 5 கிலோமீட்டர் தூரம் வரை போய் விட்டது. ரயிலை நிறுத்திய பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து தேடிப் பார்த்தனர். 2 மணி நேரத் தேடலுக்குப் பின்னர் இறந்த நிலையில் அப்பெண்ணின் உடல்தான் கிடைத்தது.
அந்தப் பெண்ணின் பெயர் கஸ்தூரி. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மெலநீலிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 21 வயதான கஸ்தூரிக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. கஸ்தூரி தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்துள்ளனர். கஸ்தூரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடக்க இருந்ததால், 2 நாட்களுக்கு முன்னர் அனைவரும் சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக ரயிலில் பயணித்தனர்.
ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. அப்போது, காற்றோட்டமாக இருப்பதற்காக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்ட போது நிலைதடுமாறி தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதனை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அபாய சங்கிலியை இழுக்க முயன்ற போது, அது வேலை செய்யாததினால் அருகில் இருந்த பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
சுமார் 5 கிலோமீட்டர் தள்ளிச் சென்று ரயில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள் அப்பெண்ணை தேடியுள்ளனர். அப்பெண் எங்கேயும் கிடைக்காத நிலையில், விருத்தாசலம் ரயில் நிலையம் வந்த உறவினர்கள் அப்பெண்ணை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று கர்ப்பிணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடலுக்கு பின்னர் உளுந்துர்பேட்டையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இறந்து கிடந்த கர்ப்பிணியின் உடலை மீட்டனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியது.
ரயிலில் அசம்பாவிதம் ஏற்பட்டால் ரயிலை நிறுத்துவதற்காகத்தான் அபாயச் சங்கிலி உள்ளது. ஆனால் அது வேலை செய்யாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}