சென்னை: தேமுதிகவின் செய்தி தொடர்பாளராக நடிகர் ராஜேந்திர நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிகவில் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமனங்களை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி தேமுதிகவின் புதிய செய்தி தொடர்பாளராக ராஜேந்திரநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடிகராக இருந்து வருபவர். விஜயகாந்த்துடன், வடிவேலுவுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மீசை ராஜேந்திரநாத் என்பது இவரது செல்லப் பெயராகும்.
இதே போல சமூக வலைதள குழுக்களுக்கும் நிர்வாகிகளை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி சமூக வலைதள அணியின் செயலாளராக எஸ். செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளராக அரவிந்தன், மகேந்திரன், தமிழரசன், சிவக்குமார் நாகப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர தொலைக்காட்சியில் பங்கேற்கும் விவாத குழுவையும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி அவை தலைவரான டாக்டர் வி. இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், துணைச்செயலாளர் பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், விழுப்புரம் தேமுதிக செயலாளர் வெங்கடேசன், தேர்தல் பணிக்குழு செயலாளர் பேராசிரியர் மகாலட்சுமி, செய்தி தொடர்பாளர் எம் வி எஸ் ராஜேந்திரநாத், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபா ரவி ஆகியோர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்,.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}