சென்னை: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது தான் நமது பழமொழி. எல்லாரும் ஒற்றுமையாக இருத்தல் என்பது வரவேற்கக் கூடியது. இது உட்கட்சி பிரச்சனை. இதை அவர்கள் தான் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கட்சியில் பூசல் ஏற்பட்டு, பிரிவு உண்டானது. ஓபிஸ் மற்றும் இபிஎஸ் இடையே பிரச்சனை வலுக்க ஆரம்பித்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதன்பின்னர் அதிமுக எனக்குது தான் சொந்தம் என்று மாறி மாறி கூறிவந்தனர். இது தொடர்பாக வழக்குகளும் பதியப்பட்டு நடந்தது. இந்நிலையில், சமீபகாலமாகவே இபிஎஸ் செயல்பாடுகளிலில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார் செங்கோட்டையன். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், செப்டம்பர் 05ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது குறித்து இன்று காலை அவர் பேசுகையில், நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து வருகிறேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் அதிமுக.,வின் நலன் கருதியே நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்றால் அதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே அதிமுக.,வால் மீண்டும் வெற்றி பெற முடியும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக நான், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் 6 பேர் பொதுச் செயலாளரை சென்று ஆறு மாதங்களுக்கு முன்பு சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார். அதனாலேயே அவரது கூட்டங்களை நான் தவிர்த்து வருகிறேன்.
மறப்போம், மன்னிப்போம் என அதிமுக தலைவர்கள் வழியில் செயல்பட்டு, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அரவணைத்து, ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இன்று தென் மாவட்டங்களில் அதிமுக.,வின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் 10 நாட்களில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒருமித்த கருத்து கொண்டவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவோம். பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத வரை எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செங்கோட்டையன் கருத்திற்கு பல்வேறு கட்சியினை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து பேசுகையில், இது உட்கட்சி விவகாரம். அதிமுகவை சேர்ந்தவர்கள் கூடி பேசி எடுக்க வேண்டிய முடிவு. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது தான் நமது பழமொழி. எல்லாரும் ஒற்றுமையாக இருத்தல் என்பது வரவேற்கக் கூடியது. இது உட்கட்சி பிரச்சனை. இதை அவர்கள் தான் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. பாடல் புகழ்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
யார்? யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூற வேண்டும்: திருமாவளவன்
செங்கோடையன் பேச்சு... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
Unified ADMK: செங்கோட்டையன் கருத்துக்கு பெருகும் ஆதரவு.. என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?
செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் மறுத்தால்.. திமுக, தவெகவுக்கு சாதகமாகும் களம்!
செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் தான் என்பதை நிரூபித்துவிட்டார்: சசிகலா
பிரிந்து சென்றவர்கள் என்றால்.. நயினார் நாகேந்திரன் முதல் செந்தில் பாலாஜி வரை பெரிய லிஸ்ட்டாச்சே!
{{comments.comment}}