சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து 48 நாள் ஆவதையொட்டி, இன்று விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக "காணாம தேடுறோம் " என்ற இசை ஆல்பத்தை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி காலமானார். சென்னையில் உள்ள தனியார் முருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட பலரையும் சோகத்தில் மூழ்கடித்தது. தற்போது வரை விஜயகாந்த் மறைவிலிருந்து அவரது ரசிகர்கள் மற்றும் தேமுதிக கட்சி தொண்டர்கள் மீண்டு வராத நிலையில் உள்ளனர். தினந்தோறும் அவருடைய நினைவிடத்தில் தானாக முன்வந்து அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.
விஜயகாந்த் இருந்த வரை அவர் செய்த உதவிகள் என்ன என்று கூட தெரியாமல் இருந்தது. அவர் மறைவிற்கு பின்னர் தான் அவருடைய உதவும் தன்மை பலருக்கும் தெரிந்தது. சாமானிய மக்களில் தொடங்கி, இன்று திரைத்துறையில் பிரபலமாக உள்ளவர்கள் வரை அவர் உதவி செய்துள்ளார். இப்படி அவர் செய்த உதவிகள் ஏராளம் என்றே சொல்லலாம். இப்படிப்பட்டவர் மறைந்து இன்றுடன் 48 நாட்கள் ஆகின்றன.

இதனை அனுசரிக்கும் விதமாக காணாமல் தேடுகிறோம் கேப்டனை என்கிற இசை ஆல்பத்தை பிரேமலதா விஜயகாந்த் அவரது நினைவிடத்தில் இன்று வெளியிட்டார். கேப்டன் விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக "காணாம தேடுறோம் கேப்டனை"... இசை ஆல்பத்தை, பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் 48வது நாளான இன்று, அவரது நினைவிடத்தில் வெளியிட்டார்!
குணாஜீ இயக்கத்தில், கெவின் டிகோஸ்டா இசையில், இசைப்பிரியன் பாடல் வரிகளை, ஜாக் அருணாசலம் பாடி, தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். கர்நாடகாவை சார்ந்த ஜமால் உசேன் உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பாடல் ஒளிபரப்பப்பட்டது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}