விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா.. முதல்ல தவெக மாநாடு முடியட்டும்.. பிரேமலதா விஜயகாந்த்

Sep 05, 2024,07:38 PM IST

மதுரை: விஜய் கட்சியின் மாநில மாநாட்டுக்குப் பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


மதுரை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகும். அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்டத்திட்டமிட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக் கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும்.


கோட் படத்துக்கு வாழ்த்துகள்:




நடிகர் விஜய்யின் கோட் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சனை?  உரிய முறையில் அனுமதி கேட்டால் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவின் நீதிமன்றம் அனுமதி பெற அரசால் முடிகிறது. 


ஜனநாயக நாட்டின் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள். யார் வளர்ச்சியும் யாரும் தடுக்க முடியாது. விஜய் மாநாடு நடத்தட்டும், கொள்கைகள் செயல்பாடுகளை அறிவிக்கட்டும். அதன்  பின்னர் அவருடன்  கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும் 


ஆவின் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடக்கிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டியது அரசாங்கம். ஆனால், அரசாங்கம் தடுக்க தவறிவிட்டது. 


பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்:


பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.  பசுத் தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர்கள் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். பெண்களிடம் அத்துமீறல்களில்  ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் ஒட்டுமொத்த ஆண்களுக்கும் தலை குனிவாக உள்ளது.


முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும், ஒரே இரவில் 5000 கோடி செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்.அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

news

மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு

news

ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

அதிகம் பார்க்கும் செய்திகள்