சபரிமலை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விரைவில் சபரிமலைக்கு வருகை தரவுள்ளார். சபரிமலைக்கு வரும் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெயரைப் பெறுகிறார் திரவுபதி முர்மு.
அவர் பம்பையிலிருந்து மலையேறுவாரா அல்லது அவசர தேவைக்கான சாலையில் செல்வாரா என்பதை SPG முடிவு செய்யும். இந்த வரலாற்று சிறப்புமிக்க வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, விழாவிற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன.
மே 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் முர்முவின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களாக இது குறித்து பேச்சு இருந்தது. இப்போது அவர் வருவது உறுதியாகிவிட்டது என்றார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மே 18ஆம் தேதி கோட்டயத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மே 19ஆம் தேதி நிலக்கல் ஹெலிபேட் பகுதிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பம்பை base campக்கு சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்படுவார். பிரசாந்த் மேலும் கூறுகையில், "அங்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, மற்ற பக்தர்கள் போல அவரும் மலையேறிச் செல்லலாம். அல்லது அவசர தேவைக்காக இருக்கும் சாலையில் வாகனத்தில் செல்லலாம். SPG குழுதான் இதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்றார்.
சபரிமலை கோயில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் உள்ளது. பம்பையிலிருந்து சுமார் 4 கி.மீ தூரம் மலையேறிச் செல்ல வேண்டும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது. மாநிலத் தலைநகரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ளது.
சபரிமலை கோயிலுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது, 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பம்பை நதியிலிருந்து நடந்து மட்டுமே கோயிலுக்குச் செல்ல முடியும். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். அவர்கள் காலணி அணியாமல், கருப்பு உடை அணிந்து, சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும். ஒவ்வொரு பக்தரும் "இருமுடி" என்ற பிரார்த்தனைக் கிட்டை தலையில் சுமந்து செல்ல வேண்டும். அதில் தேங்காய் இருக்கும். அதை 18 படிகள் ஏறும் முன்பு உடைப்பார்கள். இருமுடி இல்லாமல் யாரும் அந்த 18 படிகளில் ஏற முடியாது.
சபரிமலை கோயிலில் பல ஆண்டுகளாக சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்பு, இந்த கோயில் நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் திறந்து ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் மூடப்படும். ஆனால் இப்போது ஒவ்வொரு மலையாள மாதத்தின் ஆரம்பத்திலும் சில நாட்கள் திறந்திருக்கும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}