பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
வினேஷ் போகத் விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வினேஷ் போகத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது. நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் ஏமாற்றத்தைத் தந்தாலும் 140 கோடி இதயங்களின் சாம்பியன் வினேஷ். அவரது காவியமான மன உறுதியும் பின்னடைவும் ஏற்கனவே இந்தியாவில் இருந்து வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் குடியரசுத் தலைவர்.
அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில், ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மில்லியன் கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. உலக சாம்பியனை வீழ்த்திய பெருமையுடன் அவர் பிராகசித்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறையில் முன்மாதிரியாக திகழும் அவரது பயணத்தில் இது ஒரு தடை மட்டுமே. இதில் இருந்து அவர் மீண்டெழுந்து வெற்றியாளராக திகழ்வார் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்கள் வாழ்த்தும், ஆதரவும் எப்போதும் அவருக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}