சென்னை: டான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டுள்ள பிரியங்கா மோகன் தமிழில் முதன் முதலில் நடித்து இதுவரை வெளியாகாமல் இருக்கும் டிக்டாக் படம் விரைவில் திரைக்கு வரப் போவதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது.
முதல் படம் இப்போதாவது வெளி வருகிறதே.. பிறகு ஏன் பரபரப்பு என்று கேட்கலாம். இருக்கே.. இப்படத்தில் கொஞ்சம் அப்படி இப்படி நடித்துள்ளாராம் பிரியங்கா மோகன். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
கன்னடம், தெலுங்கில் நடித்து வந்தவரான பிரியங்கா மோகன், தமிழில் அறிமுகமான முதல் படம் டிக் டாக். அப்போது பரபரப்பாக இருந்த டிக்டாக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. எம்.கே. எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் மதன்குமார் தயாரித்துள்ள இப்படத்தில், ராஜாஜி என்பவர் நாயகனாகவும், சுஷ்மா ராஜேந்திரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பிரியங்கா மோகன் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார்.
ஆனால் இப்படம் இதுவரை வரவில்லை. இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயனுடன், டாக்டர் படத்தில் நடித்து பிரபலமானார் பிரியங்கா மோகன். அதைத் தொடர்ந்து அவருக்கு முன்னணி ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பு அதிகம் வந்தது.
தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.
இந்த நிலையில்தான் டிக்டாக் படத்தை திரைக்கு கொண்டு வர அந்தப் படக்குழு முடிவு செய்து களம் இறங்கியுள்ளதாம். இப்படத்தில் முத்தக் காட்சி உள்ளிட்டவற்றிலும் பிரியங்கா நடித்திருந்தாராம். எனவே இந்தப் படம் வந்தால் அவரது மார்க்கெட்டுக்கு டேமேஜ் ஆகி விடுமே என்று அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனராம்.
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
{{comments.comment}}