ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிர்மலா தேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்தி பாலியலில் ஈடுபடுத்த, பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பல்வேறு அமைப்பினர் இவரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரின் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்னர் 1,160 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது . இதற்கிடையே நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இவர்கள் மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
கடந்த ஏப்ரல் 29ம் தேதி நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி பகவதி அம்மா. அப்போது நிர்மலா தேவி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அதேசமயம், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுவித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை குறித்த அறிவிப்பு நேற்று அறிவிக்கக் கூடாது என்று நிர்மலா தேவி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தண்டனை விவரத்தை இன்று அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மா இன்று தண்டைன குறித்த விபரத்தை வெளியிட்டார். அதில், நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரூ.2.42 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}