தன்னுடைய கணவர் அல்லது மனைவி தன் மீது அளவில்லாத அன்பை பொழிய வேண்டும். தீராத காதல் கொண்டிருக்க வேண்டும். நாம் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். நம்மையே சுற்றி சுற்றி வர வேண்டும் என விரும்பாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக இப்படி நினைக்காத பெண்கள் இருக்கவே முடியாது.
ஆனால் இது போல் அன்பாக நடந்து கொள்ளும் கணவர் அனைவருக்கும் கிடைக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. என் கணவர் அல்லது காதலர் என்னை கண்டு கொள்வதே இல்லை. காதலிக்க ஆரம்பித்த புதிதில் என்னையே சுற்றி சுற்றி வந்தார். நாட்கள் செல்ல செல்ல என்னை கண்டு கொள்வதே கிடையாது. எனக்காக நேரம் ஒதுக்குவதே கிடையாது. அன்பாக பேசுவதில்லை. எப்போதும் வேலை வேலை என்று என்னை மறந்து ஓடிக் கொண்டே இருக்கிறார் என குறைபட்டு புலம்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை தான் உள்ளது.
இப்படி மனம் வருத்தப்படுபவர்கள், உங்களுடைய கணவர் அல்லது காதலர் அல்லது பார்ட்னர் உங்களை சுற்றி சுற்றி வருவதற்கும், உங்கள் மீது எப்போதும் காதல் மழை பொழிவதற்கும், உங்கள் பேச்சை கேட்பதற்கும், உறவில் ஒற்றுமை, அன்யோன்யம் பலப்படுவதற்கும் ஒரே ஒரு மந்திரத்தை தினமும் சொல்லி வந்தாலே போதும். மாற்றம் நிகழ்வதை கண் கூடாக பார்க்க முடியும்.
இந்த மந்திரத்தை ஆண், பெண் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்களும், தங்கள் மனைவி அன்பாக இருக்க சொல்லலாம். தினமும் உங்களின் கணவர் அல்லது மனைவி அல்லது காதலரின் போட்டோவை பார்த்து, கண்களை மூடிக் கொண்டு,
"ஓம் தாம் த்ரீம் த்ரோம் சகாய சுக்ராய நமஹ"
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எத்தவை முறை முடியுமோ, அத்தனை முறை சொல்லலாம். போட்டோ வைத்து சொல்ல முடியாது. மற்றவர்கள் பார்ப்பார்கள் என நினைப்பவர்கள், உங்களின் துணை உங்கள் எதிரில் இருப்பதாக மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். இப்படி சொல்லி வருவதால் உங்கள் உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். குறிப்பாக கணவன்- மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள், சண்டைகள் குறைந்து அன்பு பெருகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}