- பசுங்கிளி
வாய்க்கால் கரையோரம்
வயல் காட்டு மேட்டோரம்
வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்
வரவேணும் மாமா நீ
வரவேற்க நா இருக்கேன்
பட்டணந்தான் நீ போய்
கட்டு கட்டா பணம் சேர்த்தாலும்
வயல் வெளியில் நீ இறங்கி
வரப்பு வெட்ட வேணும் மாமா
ஏர்பூட்டி உழ வேணும், என்னோடு கை கோர்த்து
நாத்து நல்லா நட வேணும்
நட்ட பயிர் வளர்ந்திடவே
தண்ணி தினம் பாய்ச்ச வேணும்

கடைக்கண்ணால் நான் பார்க்க
களைகளெல்லாம் நீ எடுக்க வேணும்
பக்குவமாய் பயிர் வளர
சிவசாமி துணை இருக்கும்
கதிர் அறுக்க வேண்டும் மாமா
விளஞ்ச நெல்ல அரிசியாக்கி
வெல்லமெல்லாம் தட்டி போட்டு
பக்குவமா பொங்கல் வச்சி
சிவசாமி கோயிலுக்கு
போலாமே வா மாமா
சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது.. பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது!
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
{{comments.comment}}