- ஆ.வ.உமாதேவி
இப்பழமொழி இதே பொருளில் கொள்வதானால், நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் குறையும்.
மிகப் பழங்காலத்தில் எம். டி.,எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற டாக்டர்கள் கிடையாது. கலர் கலர் மாத்திரைகளும் கிடையாது. நோயின் தன்மைக்கு ஏற்ப மூலிகைகளை கண்டறிந்து அவற்றை மருந்தாக கொடுத்தனர்.
இந்த மூலிகைகள் பலவற்றிற்கு வேர்களே அடிப்படையாய் உள்ளன. இந்த வேர்களை நோய்க்கு ஏற்ற வகையில் நசுக்கி நோயுற்றவருக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். உதாரணமாக பாம்பு கடி என்றால், கடிவாயில் வேரை நசுக்கி சாற்றை பிரிவார்கள் இவ்வாறு வேர்களை பயன்படுத்தி வைத்தியம் செய்த வைத்திய முறையை குறிக்கும் வகையில் சொல்லப்பட்ட பழமொழி தான் "ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்".

காலப்போக்கில் இது ஆயிரம் "பேரை" கொன்றவன் அரை வைத்தியன் என தவறாக பயன்படுத்தப்பட்டு வரத் தொடங்கியது. "வேரை" என்பதை "பேரை" என்று நம் ஆட்கள் மாற்றி விட்டனர்.
உண்மையை அறிந்த நாம் இனி சரியான பழமொழியை பயன்படுத்துவோம்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}