- ஆ.வ.உமாதேவி
தாய் இல்லாமல் நான் இல்லை!
தாய்மொழி இல்லாமல் எவரும் இல்லை!
தாயை மதிப்பவன், தாய் மண்ணை மட்டுமல்ல, தாய் மொழியையும் மதிப்பான்!
நம் தமிழை விட சிறந்த மொழி
நான் கண்டதில்லை.

தமிழ் மொழி மெல்ல
தன் நிலையை
இழப்பதை,
சில இடங்களில்
காண முடிகிறது.
ஆங்கில மோகம் கொண்ட
அன்பு பெற்றோர்,
தனியார் பள்ளியை
நாடியே,
பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
நர்சரியில் சிறு செடி
வாங்கும் போது கூட
தாய் மண்ணோடு தான் தருகிறார்கள்.
ஆனால், நாமோ
நம் குழந்தையை
நர்சரி பள்ளியில்
விடும்போது,
சேர்த்து
பிரிய வேண்டியுள்ளது.
சில பள்ளிகளில்
தமிழில் பேசினால்
தண்டனையாம்!
என்ன கொடுமை சரவணன்!
என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆங்கில மோகம் கொண்ட
பெற்றோரின் பிள்ளைகள் பாவம்!
ஆங்கிலத்தையும் சரியாக படிக்காமல்,
தமிழும் தகராறாகி,
"நெடுநல்வாடை"
என்பதை
"நெடுநாள் வடை"
என்று தேவையில்லாத இடங்களில்,
காலை உன்றியும்
காலை ஒடித்தும்
தமிழை
கொலை செய்கின்றனர்.
எதிர்வரும் நாட்களில்
தமிழுக்கு
பயிற்சி வகுப்புகள்
தொடங்கப்படுமோ?
என அச்சத்தில்
உள்ள, தமிழ் பற்றாளர்கள்.
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}