நேச மச்சான்!

Jul 20, 2026,03:22 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


தண்ணீர் குடம் 

தூக்கி நான்

தள்ளாடி  போகயில


கில்லாடி மச்சான் நீங்க

கிள்ளி விட்டு போறீங்க


வெக்கமாப் போச்சு மச்சான்

வெவரம் கெட்ட ஆளு 

நீங்க


வீட்டுப் பக்கம் வந்தாக்க

வெலகி வெலகி போறீங்க




காட்டுப் பக்கம் நான் வரவா

கலந்து பேச சம்மதமா


சோத்து மூட்டை மச்சானே

சொல்லி விட்டு போறீகளா


சொந்தக்காரி எங்கூட 

சோடி சேர வாறீகளா 


கேடித் தனம் செய்யும் மச்சான்

கேட்குதா காதுல தான்


போலி வேசம் போடாதே

பொல்லாத சிறிக்கி நானு


பொசுக்குனு கோவம் வரும்


பாசம் இருந்தா பக்கம் வந்து 

சொல்லு மச்சான்


நேசம் இருந்தாக்க 

நின்னு கொஞ்சம் பேசு மச்சான்


மனசுலே பட்டதை 

மறைக்காம சொல்லிப் புட்டேன்


ஏ மேல தோசம் இல்ல

என்னான்னு சொல்லு மச்சான்


கண்ணாகப் பாத்துக்கிறேன்

பொன்னான நேரமிது 


புறப்பட்டு வாங்க மச்சான் 

பொழுது மசங்கும் முன்ன 


புன்னகையை தாங்க மச்சான்


ஏங்கிய ஏ மனசு 

இளநீராய் குளிரும் மச்சான்


சந்தோசம் மிகுதியிலே 

சரி கம பாடும் மச்சான்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்