ஸ்ரீஹரிகோட்டா: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
புரோபா-3, கரோனா கிராப் என்ற இரு செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் சூரியனின் ஒளிவட்ட பாதையில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து பி எஸ் எல் வி, சி 59 ராக்கெட் மூலம் நேற்று மாலை 4.08 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக நேற்று முன்தினம் ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பப்பட்டு இறுதி கவுண்டவுன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி எஸ் எல் வி, சி 59 ராக்கெட் விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு இன்று மாலை 4.12 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.
மறுபக்கம், செயற்கைக்கோளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்ததை அடுத்து, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள் மூலம் பி எஸ் எல் வி, சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இரு செயற்கைக் கோள்களும் புவியின் நீள் வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}