விஜய் கட்சிக்கு மாநாட்டுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது.. டாக்டர் கிருஷ்ணசாமி

Sep 13, 2024,03:36 PM IST

மதுரை:   தவெக தலைவர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது. விஜய்யை அரசியலுக்கு வரக்கூடாது என தடுக்கக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.


விஜய் ஆரம்பித்த கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை விஜய் தற்போது செய்து வருகிறார். இந்த மாநாட்டிற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட போது பல்வேறு தடைகளை விஜய் சந்தித்த பின்னர் தான் விஜய்யின் மாநாட்டிற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிவாண்டிக்கு அடுத்து உள்ள வி.சாலையில் மாநாடு நடந்த சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. 




இந்த இடத்தில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் கூறி, கடந்த மாதம் 28ம் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  தவெக கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் காவல்துறையினர் சார்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு தவெக பதில் அளித்த நிலையில், மாநாடு நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அதிலும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது தவெக கட்சிக்கு.

 

இந்நிலையில், மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 16ம் தேதி பேரணி சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளோம். பூரண மது விலக்கை தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடாது. தமிழகத்தில் இருந்து மதுவை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மதுவில்லா ஆட்சியை கொடுப்பதற்கு திமுக-அதிமுக உத்தரவாதம் அளிக்க வேண்டும். மது ஒழிப்பில் அந்த இரு கட்சிகளும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். பூரண மதுவிலக்கில் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.


நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரக்கூடாது என தடுக்கக்கூடாது. விஜய்யை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் கைகளில் உள்ளது. விஜய்யின் மாநாட்டுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது. விஜய் மாநாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. விஜய் அரசியல் களத்திற்கு வரட்டும். அவரை நேரில் சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

அதிகம் பார்க்கும் செய்திகள்