சென்னை: 2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுப் பட்டியலை வரும் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் முன்கூட்டியே தேர்வு தேதிகள் வெளியிடுவதால் மாணவிகள் சிரமமின்றி படித்து தேர்வுக்கு தயாராக ஒரு ஊன்றுகோலாக அமைகிறது.

அந்த வரிசையில் நடப்பு கல்வியாண்டில் எப்போது பொது தேர்வுகள் நடத்தப்படும் என்பது பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு அட்டவணை பட்டியல் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் அதாவது திங்கட்கிழமை வெளியாக உள்ளது. இதனால் மாணவ மாணவிகள் ஆர்வத்தில் உள்ளனர்.
2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 14 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}