புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

Apr 07, 2026,05:19 PM IST

டில்லி : புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக இருந்து வருகிறார். நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாக சட்டசபை தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் கமிஷன், கடந்த மாதம் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. இதன் படி, வரும் ஏப்ரல் 09ம் தேதி புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.




வேட்புமனு தாக்கல் மார்ச் 16ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் மார்ச் 24ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. வழக்கம் போல் திமுக-காங்கிரஸ் கூட்டணி வைத்து புதுச்சேரி சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன. இந்த முறை புதிய வரவாக விஜய்யின் தவெக, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளை கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கட்சிக்கு தவெக ஒதுக்கி உள்ளது.


பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும் புதுச்சேரி தேர்தலுக்கான தங்களின் பிரச்சாரத்தை நிறைவு செய்து விட்டார்கள்.ஓட்டுப்பதிவு நடைபெறும் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது தேர்தல் நடைமுறை. அதன்படி ஏப்ரல் 09ம் தேதி புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால், ஏப்ரல் 07ம் தேதியான இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. 


இந்த 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 09ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் பதிவாகும் ஓட்டுக்கள், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்த பிறகு மே 04ம் தேதியன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்