புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனின், குடியரசு தின விழா தேனீர் விருந்தை திமுக புறக்கணிக்கும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், யூனியன் பிரதேச திமுக தலைவருமான இரா. சிவா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரா சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேனீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேனீர் விருந்துகளில் நானும் எங்கள் கழக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளோம்.
ஆனால் சமீபகாலமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது பாஜக கொடி கட்டாத அலுவலகமாகவும், ஆளுநர் பாஜக தலைவர் போலும் செயல்படுகிறார். இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.
ஆகவே, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் விடுத்துள்ள குடியரசு தின விழா தேனீர் விருந்து அழைப்பை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலும் ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்து நிகழ்ச்சிகளை ஆளும் திமுக புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இரு மாநிலங்களிலும் ஆளுநருக்கும், திமுகவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன் ஒத்துப் போய் செயல்படுவது நினைவிருக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}