புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை தேர்தல் 2026 வரும் ஏப்ரல் 09ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக இன்று (மார்ச் 23) காலை முதலே புதுச்சேரி அரசியல் களம் பரபரக்க துவங்கி உள்ளது. நொடிக்கு நொடி மாறும் அரசியல் மற்றும் கட்சிகளின் அறிவிப்புகள் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது.
கடைசி வரை இழுபறி:

கடந்த வாரம் வரை புதுச்சேரி அரசியலில் தொகுதி பங்கீடு தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால் புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். என்டிஏ கூட்டணியிலும் இழுபறி இருந்து வந்தது. என்டிஏ மற்றும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், விஜய்யின் தவெக 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கூறி, 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
கடைசி நிமிடத்தில் கூட்டணியை அறிவித்த தவெக:
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று புதுச்சேரி சட்டசபை தேர்தல் நாங்களும் போட்டியிடுகிறோம். இன்று பகல் 3 மணிக்குள் எந்த தொகுதி, வேட்பாளர் யார் என்பது பற்றி அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மற்றொரு புறம் ஏற்கனவே 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த பிறகு திடீரென, புதுச்சேரியில் புதிதாக துவங்கப்பட்ட நேரு தலைமையிலான நேயம் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தார் விஜய். அதோடு உருளையபேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளை நேமக கட்சிக்கு ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.
கடைசி நிமிடத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
மற்றொரு பழம்பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் எந்தெந்த கட்சி சார்பில், என்னென்ன அறிவிப்புகள் வெளி வர போகிறதோ என அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு :
புதுச்சேரி சட்டசபை தேர்தல் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24ம் தேதியான நாளை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 26 ஆகும். அன்று மாலை 5 மணிக்கு பிறகு புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்திவும், மே 04ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும்.
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
மஞ்சள் மாநகரம் ஈரோடு மாநகரின் மாபெரும் பெரிய மாரியம்மன் திருவிழா
தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
என்ன சொல்றீங்க?...ஆப்பிள் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
{{comments.comment}}