புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களை மதிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி தீபிகா அதிரடியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல இன்னொரு ஐபிஎஸ் அதிகரியான லோகேஷ்வரன் மிஸோரமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரிகளுக்குப் பதில் மிஸோரம் மற்றும் டெல்லியிலிருந்து இரு ஐபிஎஸ் அதிகாரிகள் புதுவைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 8 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் செயலாளர் ராகேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். அதில் 2018ம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த தீபிகா ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது.

முதல்வர் ரங்கசாமிக்கு மதிப்பு தருவதில்லை. அமைச்சர்களையும் மதிப்பதில்லை, உரிய மரியாதை தருவதில்லை, அலட்சியமாக நடக்கிறார் என்று என்.ஆர். காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியது. மேலும் இதுதொடர்பாக உள்துறை அமைச்சருக்கும் புகார்கள் போயின.
புதுச்சேரி சிறப்பு எஸ்.பியாக இருந்து வந்தார் தீபிகா. அவர் மீதான புகார்களைத் தொடர்ந்து அதிரடியாக அவரை ஜம்மு காஷ்மீருக்கு மாற்றியுள்ளனர்.
அதேபோல புதுச்சேரியைச் சேர்ந்த இன்னொரு ஐபிஎஸ் அதிகாரியான லோகேஷ்வரன் மிஸோரமுக்கு மாற்றப்பட்டஉள்ளார். அவருக்குப் பதில் மிஸோரமிலிருந்து குலோத்துங்கன் மற்றும் டெல்லியிலிருந்து பிரிஜேந்திர குமார் யாதவ் ஆகியோர் புதுவைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}