புதுச்சேரி: புதுச்சேரியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஒரே வாரத்தில் நீதி கிடைக்கும். விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலையும் செய்துள்ளது. இதுதொடர்பாக கருணாஸ் மற்றும் விவேகானந்தன் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சில மைனர் சிறுவர்களுக்கும் தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரமான முடிவு, புதுச்சேரி மக்களை உலுக்கியுள்ளது. கொதித்துக் கொந்தளித்துப் போயுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் இன்று சிறுமியின் வீட்டுக்கு வருகை தந்தார். சிறுமியின் தாயாரைக் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து பின்னர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், புதுச்சேரியில் உயிரிழந்த 9-வயது சிறுமியின் உடலுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன். சிறுமியின் மரணத்தில் ஒரு தாயாக நான் நிலைகுலைந்து நிற்கிறேன். சிறுமிக்கு நடந்த கொடுமை மன்னிக்கவே முடியாத குற்றம். உணர்வு பூர்வமாக சிறுமியின் குடும்பத்தினருடன் துணை நிற்கிறேன். நியாயமான கோரிக்கைக்காக போராடும் புதுச்சேரி பொதுமக்களின் மனநிலையில் தான் நானும் இருக்கிறேன். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார் டாக்டர் தமிழிசை.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் தமிழிசை பேசும்போது, ஒரே வாரத்தில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வழங்கப்படும். ஒரே வாரத்தில் சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று கூறினார் டாக்டர் தமிழிசை.
முன்னதாக அஞ்சலி செலுத்த வந்த டாக்டர் தமிழிசை செந்தரராஜனுக்கு எதிராக சிலர் கோஷமிட்டு திரும்பிப் போகுமாறு கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தினர். டாக்டர் தமிழிசையும் அதைப் பொருட்படுத்தாமல் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி விட்டுத் திரும்பினார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}