விழுப்புரம்: கொடூரமாக தனது மனைவியை கொலை செய்துவிட்டு, அந்த கொலையை மறைப்பதற்காக வாழை இலையில் சுற்றி உடலை தமிழக எல்லையில் வீசிவிட்டு சென்றுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர். கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடல் தமிழக எல்லையில் மீட்கப்பட்டதால் புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரிடம் வழக்கை ஒப்படைத்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான திருவக்கரையில் வாழை இலையில் சுற்றிய பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது இந்த பெண் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பெண் யார்.. எதற்காக கொலை செய்யப்பட்டார்.. என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்தப் பெண் புதுச்சேரியை சேர்ந்த இளவரசி என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை தீவிர படுத்தப்பட்ட நிலையில் இந்தப் பெண்ணின் கணவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கின்ற தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
அதன்படி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த பெண் புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வடுவாகுப்பம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த இளவரசி. இவரது கணவர் ராஜீவ். அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் வசிக்கும் லாரி ஓட்டுனரான ராஜ் என்ற கிருஷ்ணப்பனுடன் இளவரசிக்கு காதல் மலரவே இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கணவர் ராஜீவிற்கு தெரிய வர, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பானது. ராஜீவ் தாறுமாறாக அடித்ததில் இளவரசி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து என்ன செய்வதென்றே அறியாத ராஜீ இளவரசியின் உடலை வாழை இலையில் வைத்து கட்டி புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான திருவக்கரையில் வீசி விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
உடல் கிடந்த இடம் தமிழகப் பகுதி என்பதால் வானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜீவை அழைத்துச் சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}