புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே அவரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளார் முதல்வர் ரங்கசாமி. இந்த முடிவுக்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. காங்கிரஸ் தலைவராக இருந்த சந்திரகாசுவின் மகள் தான் இவர். போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார் சந்திர பிரியங்கா.

இந்த நிலையில் திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை.. கடந்த 10ம் தேதி திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து நீண்டதொரு கடிதத்தையும் வெளியிட்டார். அதில், தன்னை ஜாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் பாரபட்சமாக நடத்துகிறார்கள், அவமதிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவரை ஏற்கனவே முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்து விட்டதாகவும், இதைத் தெரிந்து கொண்டுதான் தானே ராஜினாமா செய்வது போல கடிதம் வெளியிட்டிருக்கிறார் சந்திர பிரியங்கா என்றும் தகவல்கள் வெளியாகின. சந்திர பிரியங்காவின் ராஜினாமா தொடர்பாகவோ அல்லது அவரது டிஸ்மிஸ் தொடர்பாகவோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்ததால் குழப்பமாக இருந்தது.
இந்த நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசையின் பெயரும் இதில் அடிபட்டது. ஆனால் அவரோ, எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு மகளைப் போலத்தான் சந்திர பிரியங்காவை, முதல்வர் ரங்கசாமி பார்த்துக் கொண்டார். ஒரு குடும்பம் போலத்தான் இந்த அரசு நடக்கிறது. சந்திர பிரியங்காவுக்குத்தான் இதில் தொடர கொடுத்து வைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சந்திர பிரியங்காவை முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. டிஸ்மிஸ் செய்தது தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்த நிலையில் அதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சந்திர பிரியங்காவின் பதவி பறி போயுள்ளது.
சந்திர பிரியங்கா எதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்ற விவாதம் தற்போது புதுச்சேரியில் கிளம்பியுள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}