- மீனா
சென்னை: "ஆடி மாசம்னா அம்மா வீட்டுக்குப் போறதும்.. புரட்டாசி வந்துட்டா சிக்கன் மட்டனை வெறுக்கறதும் சகஜம்தானப்பா".. என்று காதைக் குடைந்தபடி அங்கலாய்த்துக் கொண்டிருக்கீங்களா.. கவலையே படாதீங்க.. பாஸ்.. உங்க மனசை குளிர்விக்கத்தான் கூலா நாலு ஜோக்கோட வந்திருக்கோம்.
இதுவும் புரட்டாசி மாச ஜோக்ஸ்தான்.. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு (இருக்கும்.. இருக்கணும்).. ஸோ... படிச்சுட்டு சிரிச்சிருங்க..!
நண்பேண்டா
ராஜா : உனக்கு அந்த பொண்ண புடிச்சி இருந்தும் ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்ட.
ராமா : நீதானடா, புரட்டாசி மாசம் அதனால நான்வெஜ் சாப்பிட மாட்டேன்னு சொன்னே . அப்போ என் கல்யாணத்துல போடுற மட்டன் பிரியாணியையும் உன்னால சாப்பிட முடியாதுல்ல. அதனாலதான் வேணாம்னு சொல்லிட்டேன்.
நண்பேன்டா!
--
ஆன்மீக சுற்றுலா
( கோழி, ஆடு) பிள்ளைகள் எல்லாம் எங்கே?
இந்த மாதம் முழுவதும் தன் உயிருக்கு உத்திரவாதம் கொடுத்ததால் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆன்மீக சுற்றுலா போய் இருக்காங்க.
--
அதை மட்டும் கொடுங்க காட்!
கடவுளே உங்களுக்காக விரதம் இருப்பதினால், உங்களிடம் நான் வரமாக கேட்பது ஒன்றே ஒன்றுதான்.
என் நண்பர்கள் யாருக்கும் புரட்டாசி மாதத்தில் மட்டும் கல்யாணம் நடக்கவே கூடாது.
எனக்கு வேற நிறைய "பாய்" பிரண்டுகளா இருக்காங்க.. அப்புறம் பாய் வீட்டு பிரியாணி சாப்பிட முடியாமல் போயிரும்.. புரிஞ்சுதா அப்பனே!!!
--
மீல் மேக்கர் எஸ் மேம்.. சிக்கன் மட்டன் ஆப்சென்ட் மேம்!
கேட்டரிங் காலேஜ் கிளாஸில் அட்டெடன்டன்ஸ் எடுக்கறாங்க
மீல் மேக்கர்
எஸ் மேம்
காலிஃப்ளவர்
எஸ் மேம்
பன்னீர்
எஸ் மேம்
சிக்கன்
ஆப்சென்ட் மேம்
மட்டன்
ஆப்சென்ட் மேம்
ஃபிஷ்
ஆப்சென்ட் மேம்
என்னாச்சு இவங்களுக்கெல்லாம்... ஏன் ஆளைக் காணோம்?
புரட்டாசி மாத ஹாலிடேவுல பிக்னிக் போயி இருக்காங்க மேம்!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}