- மீனா
புரட்டாசி வந்துட்டாலே, எது வருதோ இல்லையோ.. நம்ம மக்களிடமிருந்து முதல்ல கிளம்பி வருவது ஜாலியான கேலி கிண்டல்களும்தான்.. கலாய்களும்தான்.
ஆடி மாசம் வந்தா புதுச் கல்யாணமான பெண்கள் அம்மா வீட்டுக்குப் போவதும், புரட்டாசி வந்தாலே மட்டன் சிக்கன் முட்டைகளை ஓரம் கட்டி வைப்பதும் சகஜம்தானப்பா என்று பெரியகருப்பத் தேவர் ரேஞ்சுக்குப் சமாதானப்படுத்தும் வாய்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அட புரட்டாசி வந்தா எனக்கென்ன என்று எக்ஸ்ட்ரா நான் வெஜ் சாப்பிடும் கூட்டமும் இன்னொரு பக்கம் கும்மியடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த அக்கப்போர்களை வைத்து ஒரு ஜாலியான மீம்ஸ் போடலாமே என்று யோசித்தபோது வந்து உதித்தவைதான் கீழே உள்ளவை.. நீங்களும் ரசிச்சுப் பாருங்க.. கொஞ்சம் பிரெய்ன் பிரஷ் ஆகி.. மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்.
காத்து வாங்கும் பாய் கடை
புதன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே பலருக்கும் பாய் கடைகள்தான் ஞாபகத்துக்கு வரும். மட்டனா சிக்கனா ஃபிஷ்ஷா என்றுதான் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்புவோம்.. ஆனால் புரட்டாசி வந்தால் அந்த "பாயே" கடையில் சும்மாதான் அமர்ந்திருக்கிறார் இப்போதெல்லாம்.
காய்கறிகளுக்கு கொண்டாட்டம்
புரட்டாசி வந்து விட்டாலே கிச்சன் எல்லாம் காய்கறி வாசம்தான் தூக்கலாக இருக்கும் பெரும்பாலான வீடுகளில். நாங்க ஒரு மாசத்துக்கு கவுச்சி எடுக்க மாட்டோம்னு பெருமையாக சொல்லிக் கொள்வோர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. கத்திரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், அவரைக்காய்க்கெல்லாம் கொண்டாட்டம்தான்!
மட்டன் கிடையாது மசாலா மட்டுமே
கடைக்குப் போகும்போது மறக்காம மட்டன் மசாலா சிக்கன் மசாலா வாங்குங்கன்னு சொல்வதுண்டு. ஆனால் இந்த ஒரு மாதத்துக்கு மட்டும் அதுக்கு ரெஸ்ட் கொடுத்திருவாங்க பலரும்.. வெறும் மசாலா பவுடர் மட்டும்தான். அதை வைச்சுததான் 30 நாளை ஓட்டிட்டிருப்பாங்க.. கொஞ்சம்.. நிறைய கஷ்டம்தான்!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}