சென்னை: புஷ்பா 2 படத்தின் 2வது பாடல் இன்று வெளியானது. இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான ரசிகள் இணையத்தில் பார்த்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிளான 'புஷ்பா...புஷ்பா' பாடல் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் இரண்டு மடங்காக்கியுள்ளது. 'புஷ்பா: தி ரூல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சூடானா...(கப்புள் பாடல்)' அறிவிப்பு ராஷ்மிகா இருக்கும் புரோமோவுடன் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமாகினர். படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஷ்மிகா, ஸ்ரீவள்ளியாக மாறும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் இந்த புரோமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
'புஷ்பா1' படத்தில் புஷ்பா மற்றும் ஸ்ரீவள்ளி கதாபத்திரங்களுக்கு இடையேயான காதல் பாடலாக 'சாமி சாமி' ஹிட்டடித்தது. அதே போன்ற காதல் பாடலாக 'சூடானா...' ஹிட் அடிக்கும் இருக்கும் என இந்த புரோமோ உறுதியளிக்கிறது. இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் பாடலை எழுதியுள்ளார். படத்தின் இசை உரிமையை டி-சீரிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். புஷ்பா 2 படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஒரு பாடைல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி என 6 மொழிகளில் பாடியுள்ளார் ஸ்ரேயோ கோஷல்.
புஷ்பா2 தி ரூல் படத்தில் இருந்து வெளியான 'புஷ்பா புஷ்பா' பாடல் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கானது. அல்லு அர்ஜூன் புஷ்பாவாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், அல்லு அர்ஜூனின் தோற்றமும் ரசிகர்களை வசீகரித்து கமர்ஷியல் படத்திற்கான எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. புஷ்பா 1 விட புஷ்பா 2 பட்டையை கிளம்பும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}