நுலுலபா: பிஜி தீவு அருகே உள்ள டோங்கா தீவில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகினது.
தென் பசிபிக் பெருங்கடலில் பிஜி தீவு அருகே உள்ளது டோங்கா தீவு. இந்த தீவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் பலவேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. அதிலும் சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன. இப்பகுதி 177 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். இதில் 52 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
டோங்கா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவாகினது. இதனை ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் ரோடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அத்துடன் பள்ளிகளுக்கு அங்குள்ள அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஜி தீவுகளின் தெற்குப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலும், டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் 6.0 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது குறிப்படத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}