சென்னை: அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்றது. நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்குகிறது.
காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி ஆகியவை முடிந்த நிலையில் இன்றோடு விடுமுறைகள் முடிவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை 6 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்குகின்றன.
1 முதல் 5 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வருகிற 8 ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
காலாண்டு விடுமுறை முடிவடைவதையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போயிருந்தோர் மீண்டும் தத்தமது ஊர்களிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டுள்ளனர். அதேபோல பல்வேறு ஊர்களிலும் அவரவர் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இனி அடுத்து மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அடிக்கடி லீவு கிடைக்கலாம் என்ற "நம்பிக்கை"யுடன் மாணவ, மாணவியர் நாளை முதல் வகுப்புகளுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}