ராஜ்கோட்: இந்திய பந்து வீச்சாளர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே அந்த சாதனையைப் படைத்திருந்தார். இருவருமே சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது விக்கெட்டைச் சாய்த்து அசத்தினார். இதற்கு முன்பு இந்த சாதனையைச் செய்தவரான அனில் கும்ப்ளே மொத்தம் 619 டெஸ்ட் விக்கெட்களைச் சாய்த்துள்ளார். இந்த சாதனையை அஸ்வினால் முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
37வது வயதான அஸ்வின் தனது டெஸ்ட் விக்கெட் சாதனையை 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் நிகழ்த்தினார். அவரது 500வது விக்கெட்டாக அமைந்தவர் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி ஆவார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}