சென்னை: இந்திய கிரிக்கெட்டை எனது நெஞ்சில் பச்சை குத்தி வச்சிருக்கேன் என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ஆர். அஸ்வின்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினை நீக்கி விட்டு ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் அடங்கிய சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளனர். அனைவருமே இடது கை பந்து வீச்சாளர்கள் ஆவர்.
லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சஹல் மற்றும் ஆப் ஸ்பின்னரான அஸ்வின் அணியில் சேர்க்கப்படாதது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அஸ்வினை சேர்க்காமல் விட்டது தவறு. இப்படித்தான் உலகக் கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியிலும் அஸ்வினை சேர்க்காமல் கடைசியில் இந்தியா மிகப் பெரும் தடுமாற்றத்தை சந்தித்தது. கோப்பையையும் வெல்லத் தவறியது என்று பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணித் தேர்வை ஆதரித்து அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தோல்விகளையும் கொடுத்துள்ளேன், வெற்றிகளையும் கொடுத்துள்ளேன். எதுவாக இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டை எனது நெஞ்சில் பச்சை குத்தி வைத்துள்ளேன். அவர்களுக்கு எனது சேவை நாளையே தேவைப்பட்டாலும் கூட நான் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன். எனது 100 சதவீத பங்களிப்பை நிச்சயம் அளிப்பேன்.
இப்போதைய நிலையில் அக்ஸார் பட்டேலிடமிருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். அவருக்கு நல்ல ஸ்பேஸ் தரப்பட வேண்டியது அவசியம். ஒரு வேளை அக்ஸார் சரியாக செய்யாவிட்டாமல், செய்ய முடியாமல் போனால் ஷர்துள் தாக்குர் கை கொடுக்க வேண்டும். 5 அல்லது 6 ஓவர்கள் அல்லது 8 ஓவர்கள், 2 அல்லது 3 விக்கெட் எடுத்தால் நன்றாக இருக்கும்.
அக்ஸார் படேலுக்கு ஒவ்வொரு போட்டியிலும் 10 ஓவர் கிடைக்குமா என்று சொல்லமுடியாது. அதேசமயம், அவருக்கு அதிக அளவிலான ஓவர்கள் தொடர்ந்து கிடைத்தால் அவர் செட் ஆகி விடுவார். பிறகு விக்கெட்கள் ஈஸியாக வர ஆரம்பிக்கும்.
அணித் தேர்வு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது எனது வேலையல்ல. வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி நான் எப்போதும் முழுமையாகத்தான் இருப்பேன், இருக்கிறேன். எந்தவிதமான நெகட்டிவிட்டியையும் என்னிடம் அண்ட விட மாட்டேன் என்றார் அஸ்வின்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}