ராஜ்கோட்: 3வது டெஸ்ட் போட்டியின் பாதியிலேயே அணியிலிருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தற்போது மீண்டும் அணியில் இணையவுள்ளதாக பிசிசிஐ கெளரவச் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டுள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அணியின் முக்கிய வீரரான ஆர். அஸ்வின் 2வது நாளிலேயே பிரேக் எடுத்துக் கொண்டு வெளியேறினார். குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் 3வது டெஸ்ட் போட்டியில் இணையவுள்ளார் அஸ்வின்.
3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் இணையவுள்ளதாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் விளையாடுவார் என்றும் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
வீரர்களின் குடும்பத்தின் நலன் மிக முக்கியமானது. இதை பிசிசிஐ எப்போதும் உணர்ந்திருக்கிறது. அஸ்வினுக்கு ஏற்பட்ட இந்த மருத்துவ அவசர தேவைச் சூழலில் அணி நிர்வாகம், சக வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள், பிசிசிஐ ஆகியோர் துணை நின்றோம். மீண்டும் அஸ்வின் களத்திற்குத் திரும்புவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் ஜெய்ஷா.
அஸ்வின் மீண்டும் ஆட வருவதால் இந்திய அணியும் பலமடைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்ஸ்டோனை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}