- ரா. பிருந்தா ஜெயந்தி, நெய்வேலி
பீர்க்கங்காய், சௌ சௌ, வாழைக்காய் ஆகிய காய்கறிகளின் தோல்களை வீணாக்காமல் சுவையான, ஆரோக்கியமான துகையல் (துவையல்) செய்யும் எளிய முறை உங்களுக்குத் தெரியுமா.. வாங்க சொல்லித் தர்றோம்.. (இந்த தோல்களைத் தனித்தனியாகவோ அல்லது மூன்றும் சேர்த்தோ பயன்படுத்தலாம்.)
தேவையான காய்கறியின் தோல்கள்
1. பீர்க்கங்காய் தோல்
2. செளவ் செளவ்வின் தோல்
3. வாழைக்காயின் தோல்
இவற்றை சிறு துண்டுகளாக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.
வறுக்கத் தேவையான பொருட்கள்

4. மிளகாய் வற்றல் (காரத்திற்கு தகுந்தாற் போல் )
5. உளுத்தம் பருப்பு (தேவையான அளவு )
6. பெருங்காயம் (சிறிதளவு )
7. புளி - சிறிய நெல்லிக்காயளவு (புளிக்குப் பதிலாக தக்காளியும் உபயோகிக்கலாம். அதற்கேற்றார் போல் ருசி மாற்றம் பெரும்)
8. உப்பு - (தேவையான அளவு )
9. தேங்காய் துருவல் -2 ஸ்பூன் (விருப்பமிருந்தால் உபயோகிக்கலாம். கடைசியாக சேர்க்கவும் )
10. வறுக்க தேவையான எண்ணெய்
வறுத்த அனைத்தையும் ஆறவைத்துக் கொள்ளவும். முதலில், வதக்கிய தோல்களை மிக்ஸியிலிட்டு கொர கொரவென
அரைத்துக் கொண்டு, அதனுடன் வறுத்த பொருட்களையும் சேர்த்து பல்ஸ் மோடில் கொர கொரவென அரைத்துக்
(1 ஸ்பூன் அளவு மட்டும் நீர் சேர்த்து அரைக்கவும்) கொள்ளவும்.
தாளிக்க
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு -சிறிதளவு
கறிவேப்பிலை -1/2 ஆர்க்
எண்ணெய் -தாளிக்க
தாளிப்பை அரைத்தெடுத்த துகையலில் சேர்த்து கலந்து பரிமாறவும். தோசை, இட்லி, சாதத்துடன் பிசைந்தும், மோர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
முதியோர் உடல் நலம்!
அம்மா பாடிய தாலாட்டு
காய்கறி தோல் துகையல்!
SOLITARY REPAIR.. மண்டைல ஏறவே இல்லையே ஜோ!
ஒரு பக்க கதை .. கதையின் பெயரே இதுதான் பாஸ்!
அது என்ன....!
Tamil Haiku: அடைமழை ஆதவனுக்கும் குளிர்!
Thursday Thoughts: உடையாத வரை ஒரு முகம்.. உடைந்து விட்டால் பல முகம்!
தென்தமிழ் தலையங்கம்: விஜய்க்கு கூடும் கூட்டம்.. எதைக் குறிக்கிறது?
{{comments.comment}}